34,000 யூரோக்களுக்கு விற்று தீர்த்த ஓர் சர்வாதிகாரியின் உரை!

Report Print Karthi in ஜேர்மனி
368Shares

சர்வதேச அளவில் இரண்டாம் உலக போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாக சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் கையால் எழுதப்பட்ட உரைக் குறிப்புகள் வெள்ளிக்கிழமை முனிச்சில் நடந்த ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் திருப்பியுள்ளது.

ஹெர்மன் ஹிஸ்டோரிகா ஏல நிறுவனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னர் தேதியிட்ட கையெழுத்துப் பிரதிகளை விற்பனை செய்ய முடிவெடுத்து ஏலம் விடப்பட்டது.

ஆவணங்கள் அநாமதேய ஏலதாரர்களுக்கு அவர்களின் ஆரம்ப விலையை விட அதிகமாக விற்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் 1939 இல் பெர்லினில் புதிய இராணுவ அதிகாரிகளிடம் ஹிட்லர் தனது உரையை கோடிட்டுக் காட்டிய ஒன்பது பக்க கையெழுத்துப் பிரதியானது 34,000 யூரோக்கள் வரை விற்பனையாகியுள்ளது.

யூத அமைப்பு ஒன்று இந்த ஏலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ஐரோப்பிய யூத சங்கத்தின் தலைவரான ரப்பி மெனாச்செம் மார்கோலின், ஜெர்மனியில் அதிகரித்துவரும் யூத எதிர்ப்பு காரணமாக இந்த விற்பனை கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த ஏலம் ஹிட்லருடைய சிந்தனையை அதிக அளவில் வளர்த்தெடுக்கவே பயன்படும் என்று கூறப்படுகின்றது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்