அவர்களைக் கொன்று நாக்கு துண்டிக்க வேண்டும்: ஜேர்மனியில் சிக்கிய ஐ.எஸ் தீவிரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
672Shares

ஜேர்மனியில் சுற்றுலா பயணியை கத்தியால் தாக்கி கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதி, உள்ளூர் கிறிஸ்தவர்களை கொன்று அவர்களின் நாக்கை துண்டிக்க விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் டிரெஸ்டன் பகுதியில் 55 வயதான தாமஸ் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் 20 வயதான அப்துல்லா என்பவரை புதனன்று பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததன் 5 நாட்களுக்கு முன்னரே, 2 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத் தண்டனையை முடித்து அப்துல்லா வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

ஆதரவற்ற சிறுவனாக 2015 இல் சிரியாவின் அலெப்போவிலிருந்து ஜேர்மனிக்கு வந்த அப்துல்லாவுக்கு 2016 மே மாதம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஆனால், அவரது குற்றச்செயல் நடவடிக்கைகளால் 2019-ல் ஜேர்மன் நிர்வாகம் அவரது அகதி அந்தஸ்தை ரத்து செய்தது.

இருப்பினும், சொந்த நாட்டில் உள்நாட்டுப் போர் ஓயாத நிலையில் ஜேர்மன் நிர்வாகம் அப்துல்லாவை வெளியேற்ற தாமதித்து வந்தது.

இதனிடையே புகலிடக்கோரிக்கையாளராக தங்கி வந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு அப்துல்லா ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கியதுடன் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தியும் வந்துள்ளார்.

மேலும், கிறிஸ்தவர்களை கொன்று அவர்களின் நாக்கை துண்டிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக அச்சுறுத்தலுக்கு காரணாமனவார்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட அப்துல்லா, 2017-ல் கைது செய்யப்பட்டார்.

மட்டுமின்றி, இணையத்தில் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பில் தகவல்கள் திரட்டியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்