ஜேர்மனி தலைநகரில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்: ஏதற்காக? அரசாங்கத்திற்கு குவியும் எதிர்ப்பு

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் மக்கள் திடீரென கூடி போராட்டத்தில் குதித்த சம்பவம் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 11,176 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவானது, மொத்த எண்ணிக்கை இப்போது 4,29,181-ஐ எட்டியுள்ளது என்று நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 29 அதிகரித்து 10,032 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தலைநகர் பெர்லினில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்திய படி மக்கள் தலைநகரில் பேரணியாக சென்றனர்.

வைரஸ் பரவலை குறைக்க அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ஜேர்மன் தலைநகரில் புதிய விதிகள், நடைமுறைக்கு வந்தன.

அதன் படி தலைநகரில் கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் இரவு 11 மணி முதல் காலை 6 வரை மூடப்பட வேண்டும், அதே நேரத்தில் ஐந்து பேர் அல்லது அதிகபட்சம் இரண்டு வீட்டார்கள் மட்டுமே ஊரடங்கு உத்தரவு நேரங்களில் வெளிப்புறங்களில் சந்திக்க முடியும்.

இந்த கட்டுப்பாடுகள் அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்