ஜேர்மனியில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
அந்த வகையில் ஜேர்மனியில், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து ஜேர்மனியின் ராபர்ட் கோச் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24(அக்டோபர் 24-ஆம் திகதிப் படி) மணி நேரத்தில் 14,714 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் பதிவான மிக அதிகமான பாதிப்பாகும்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,18,005 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 49 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து வைரஸுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,003ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.