ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்! வெளியான முக்கிய தகவல்கள்

Report Print Karthi in ஜேர்மனி
585Shares

ஜேர்மனி கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மேர்க்கெல் எச்சரித்துள்ளது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 12 லட்சத்தினை நெருங்கி வந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது தொற்றின் இரண்டாவது அலை ஐரோப்பாவில் வேகமெடுத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் பாதிப்புகளை கொண்ட மிகவும் கடினமான நாட்கள் நம் முன்னே இருப்பதாக அதிபர் எச்சரித்துள்ளதாகவும், நிலைமை அச்சுறுத்துவதோடு ஒவ்வொரு நாட்களும் கணக்கிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று அதிபர் கூறியதாக தனது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சக ஊழியர்களிடம் பிரதமர் கூறியிருப்பது வெளியில் தற்போது கசிந்துள்ளது.

இதன் காரணமாக வரும் வெள்ளிக்கிழமை, அவர் 16 மாநிலங்களின் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்த உள்ளார்,

அங்கு தற்போது நடைமுறையில் உள்ளதை விட கடுமையான நாடு தழுவிய கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்ட சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முயற்சிப்பவர்களை நம்புவதை நிறுத்துமாறு ஒரு வீடியோ மூலம் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தற்போது வரை 4.37 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3.17 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதே போல இதுவரை 10,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்