தேவாலயத்திற்குள் நுழைந்த திருடர்கள்: அவர்கள் திருடிச் சென்றது விலையுயர்ந்த பொருட்களை அல்ல

Report Print Balamanuvelan in ஜேர்மனி
481Shares

ஜேர்மன் தேவாலயம் ஒன்றின் குண்டு துளைக்காத கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது.

அந்த தேவாலயத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதர்களில் ஒருவரான Wolfgang என்பவரின் உடல் புதைக்கப்பட்டிருந்தது.

கடைசியில் பார்த்தால், அந்த திருடர்கள், அந்த புனிதரின் உடலைத்தான் திருடிச்சென்றிருந்தார்கள்.

உண்மையில் அவரது உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுகல் உட்பட பல்வேறு நாடுகளிலுள்ள தேவாலயங்களில் புதைக்கப்பட்டுள்ளன.

அப்படி ஜேர்மனியில் புதைக்கப்பட்டிருந்த புனிதர் Wolfgangஇன் உடல் பாகங்களைத்தான் அந்த திருடர்கள் திருடிச்சென்றிருந்தார்கள்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்