ஜேர்மனியில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! உணவகங்கள், பார்களை மூட வேண்டும்: அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் வலியுறுத்தல்

Report Print Basu in ஜேர்மனி
5605Shares

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நவம்பர் 4 முதல் அனைத்து உணவகங்களையும் பார்களையும் மூட மாநில தலைவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் வரைவுத் தீர்மானத்தின்படி பள்ளிகள் மற்றும் நர்சரிகளை திறந்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் மக்கள் தங்கள் சொந்த வீட்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு குடும்பத்துடன் மட்டுமே பொதுவில் வெளியே செல்ல முடியும்.

விதிகளை மீறினால் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

ஜேர்மனியின் ஏறக்குறைய அனைத்து பிராந்தியங்களிலும் நோய்த்தொற்று அதிவேகமாக அதிகரித்து வருவதால் பல உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் அனைத்து நோய்த்தொற்றுகளையும் கண்டறிந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விரிவான கட்டுப்பாடுகள் தேவையில்லை என்ற நம்பிக்கையில் இப்போது மக்களிடையே தொடர்பைக் கணிசமாகக் குறைக்க வேண்டியது அவசியம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 28 அன்று நடைபெறும் தொலைபேசி மாநாட்டின் போது ஜேர்மனியின் 16 மாநிலங்களின் தலைவர்கள் வரைவு தீர்மாத்திற்கு ஒப்புதல் அளித்தால், ஜேர்மனியில் தியேட்டர்கள், ஓபரா ஹவுஸ் மற்றும் கச்சேரி அரங்குகளுடன் உடற்பயிற்சி ஸ்டுடியோக்கள், டிஸ்கோக்கள் மற்றும் சினிமாக்கள் மூடப்படும்.

சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வாடிக்கையாளர் எண்களைக் கட்டுப்படுத்தினால் கடைகள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் உணவகங்களுக்கு பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்