கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பிரித்தானியாவை முந்தும் ஜேர்மனி: ஆனால் பிரித்தானியர்களுக்கும் மகிழ்ச்சியான செய்திதான்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1093Shares

பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி தயாராவதற்கு முன்பாகவே, அமெரிக்காவுடன் இணைந்து ஜேர்மனி தயாரிக்கும் தடுப்பூசி தயாராகிவிடும் என பிரித்தானிய அரசு அலுவலர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

அத்துடன், அந்த தடுப்பூசி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே விநியோகிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரித்தானிய நிறுவனமான AstraZeneca நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியுள்ளது போலவே, அமெரிக்க நிறுவனமான Pfizer நிறுவனத்துடன் இணைந்து ஜேர்மானிய நிறுவனமான BioNTech SEம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியுள்ளநிலையில், ஜேர்மானிய தடுப்பூசி முதலில் பிரித்தானியர்களுக்கு கிடைத்துவிடும் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

இந்த வாரத்தில் சோதனை முயற்சியாக போடப்படும் தடுப்பூசிகள் வெற்றிபெறும் நிலையில், தாங்கள் அவசர அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க இருப்பதாக Pfizer தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு பக்கம் நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், முதல் தலைமுறை தடுப்பூசிகள் செயல்படாமல் போகும் வாய்ப்பிருப்பதாக பிரித்தானிய சுகாதாரத்துறை தலைவரான Kate Bingham என்பவர் தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்