தேசிய மருத்துவ அவசரநிலையை தடுக்கவேண்டுமானால் நாம் உடனடியாக செயல்படவேண்டும்: ஜேர்மன் சேன்ஸலர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1004Shares

தேசிய மருத்துவ அவசரநிலையை தடுக்கவேண்டுமானால் நாம் உடனடியாக செயல்படவேண்டும் நேற்று முன் தினம் தான் கூறினார் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.

இதே வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தால், சுகாதாரத்துறைக்கு அதற்கேற்றாற்போல் அழுத்தம் கொடுக்கவேண்டியிருக்கும் என்றார் அவர். அவர் போட்ட கணக்கு சரிதான்... வியாழக்கிழமை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 17,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வாரத்தைவிட இது கிட்டத்தட்ட இருமடங்காகும்.

குறிப்பாக பெர்லினில் வசந்த காலத்தில் இருந்ததைவிட தற்போது கொரோனா பரவும் வீதம் பயங்கரமாக அதிகரித்துள்ளது, அது 100,000 பேருக்கு 140 ஆக உள்ளது.

கொரோனா தொற்றிய பெரும்பாலானோருக்கு குறைவான அறிகுறிகளே உள்ளன என்றாலும், கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தானே செய்யும்!

வியாழக்கிழமை நிலவரப்படி 1,600க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்கிறார்கள். அக்டோபரைக் கணக்கிட்டால், இது ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை பத்து நாளைக்கொருமுறை இரட்டிப்பாகும் என்றார் மெர்க்கல்.

இதே வேகத்தில் போனால், டிசம்பர் பாதிக்குள் ஜேர்மனியின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள படுக்கைகள் நிரம்பிவிடும்.

பெர்லினைப் பொருத்தவரை, அங்கிருக்கும் மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள 1,200 படுக்கைகளில் 87 சதவிகிதம் நிரம்பியாயிற்று. எனவேதான், ஜேர்மன் சேன்ஸலர் மெர்க்கல் ஜேர்மனி குறைந்தபட்சம் பகுதியளவாவது முடக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்