அந்த நாடு தான் எங்கள் இலக்கு: ஜேர்மனியில் 20 வயது இளைஞரின் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் தீவிரவாதம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞரின் வாக்குமூலம் அதிகாரிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தை எல்லையாக கொண்ட ஜேர்மனியின் Baden-Württemberg மாகாணத்திலேயே 20 வயது இளைஞரை தீவிரவாதம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் Lahr நகரில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலையில், குடியிருப்பு ஒன்றில் அதிரடியாக புகுந்த பொலிசார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

தற்போது பொலிஸ் காவலில் இருக்கும் அந்த இளைஞர் அளித்த வாக்குமூலத்தில், பிரான்ஸ் நாட்டில் மேலதிக தீவிரவாத தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி அதுபோன்ற ஒரு தாக்குதலில் தாமும் ஈடுபட தயாராக இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் பகிர்ந்த தகவலின் அடிப்படையில், விசாரணையை விரிவுபடுத்தியுள்ளதாகவும், மேலதிக தகவல்கள் திரட்டப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான இளைஞரின் குடியிருப்பில் மேற்கொண்ட சோதனையில் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆனால் அவர் திரட்டியுள்ள தகவல்களின் தொகுப்பு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்