இன்று முதல் ஜேர்மனியில் ஊரடங்கு அமுல்: விவரங்கள் செய்திக்குள்...

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஐரோப்பா முழுவதும் பல நாடுகள் ஊரடங்குக்கு திரும்புகின்றன. பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் ஜேர்மனியும் இரண்டாவது ஊரங்கிற்கு திரும்புகிறது.

ஜேர்மனியைப் பொருத்தவரை, முழு ஊரடங்கு அல்ல, ஆனால், இன்று முதல் ஜேர்மனியில், பகுதி ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. அது நான்கு வாரங்களுக்கு அமுலில் இருக்கும்.

ஊரடங்கின்போது, கொரோனா விதிகளின்படி, மதுபான விடுதிகள் மூடப்படும், ஆனால், உணவகங்கள் திறந்திருக்கும். என்றாலும் உணவு வாங்கி செல்வதற்கு மட்டுமே அனுமதி. கடைகள் திறக்கலாம், ஆனால், 10 சதுரமீற்றருக்கு ஒருவர்தான் நிற்க அனுமதிக்கப்படுவார்.

உடற்பயிற்சிக் கூடங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும். சுற்றுலாப்பயணிகளுக்கு ஹொட்டல்களில் அனுமதியில்லை.

கட்டிடங்களுக்குள் கூடும் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு அனுமதி, அதிகபட்சம் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கூடலாம்.

பிரான்சைப் போலவே, பள்ளிகள், பகல் நேர குழந்தைகள் காப்பகங்கள் இயங்கும், முதியோர் இல்லங்களுக்கு பார்வையாளர்கள் செல்ல அனுமதி உண்டு.

இது குறித்து பேசிய ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், தேசிய சுகாதார அவசர நிலையை தவிர்ப்பதற்காக, நாம் இந்த நேரத்தில் செயல்படவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்