சீனாவை நேரடியாக எதிர்க்கும் வகையில் ஜேர்மனி அதிரடி நடவடிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்த சீனா முயன்றுவரும் நிலையில், அதை எதிர்த்து ஜேர்மன் போர்க்கப்பல்களில் ஒன்றை அப்பகுதிக்கு ரோந்து செல்வதற்காக அனுப்ப இருப்பதாக ஜேர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சரான Annegret Kramp-Karrenbauer அறிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடுத்த ஆண்டில் ஜேர்மன் போர்க்கப்பல் ஒன்று ரோந்து செல்ல இருக்கிறது.

கொரோனா தங்கள் பட்ஜெட்டை பாதித்தது உண்மைதான் என்று தெரிவித்த Kramp-Karrenbauer, என்றாலும், 2020ஐக்காட்டிலும் 2021இல் பாதுகாப்புக்கு அதிக நிதியை செலவிட இருப்பதாக தெரிவித்தார்.

எல்லைப் பிரச்சினைகள், சர்வதேச விதி மீறல்கள் மற்றும் உலகை தன் கட்டுக்குள் கொண்டு வர முயலும் சீனாவின் குறிக்கோள் ஆகியவற்றை பலர் இணைந்துதான் எதிர்கொள்ள முடியும் என்றார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்