கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்ட ஜேர்மனி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இன்று கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்டது ஜேர்மனி. ஜேர்மனியில், கடந்த 24 மணி நேரத்தில், 19,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக The Robert Koch நிறுவனம் இன்று காலை தெரிவித்துள்ளது. இதற்கு முன், கடந்த சனிக்கிழமை 19,000 பேருக்கு கொரோனா தொற்று

கண்டறியப்பட்டதுதான் அதிகமாக இருந்த நிலையில், நேற்றைய எண்ணிக்கை, அதையும் தாண்டிவிட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 19,200 வரை உயரலாம் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கணித்திருந்த நிலையில், உண்மை நிலவரம், அதையும் தாண்டிவிட்டது.

நேற்று கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 118. இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 11,000.

ஆனால், ஒரே நல்ல செய்தி என்னவென்றால், R எண், அதாவது ஒருவரிடமிருந்து கொரோனா தொற்று எத்தனை பேருக்கு பரவுகிறது என்ற எண்ணிக்கை இன்னமும் ஒன்றிற்கு கீழேயே உள்ளது என்பதுதான்.

நேற்றைய R எண் 0.81, புதன்கிழமை அது 0.94 ஆக இருந்ததும், நேற்று அது குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்