வியன்னா தாக்குதாரியுடன் தொடர்பு: ஜேர்மனியின் பல மாவட்டங்களில் தீவிர தேடுதல்! பொலிஸ் முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி

வியன்னா தாக்குதல்தாரியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேருக்கு தொடர்புடைய வீடுகள் மற்றும் வணிகங்களில் தீவிர தேடுதல் மேற்கொண்டு வருவதாக ஜேர்மனி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் பி.கே.ஏ குற்றவியல் பொலிஸ் ட்விட்டரில் பதிவிட்டதாவது, ஜேர்மனிய நகரங்களான ஒஸ்னாபிரூக், காஸல் மற்றும் ஹாம்பர்க்கிற்கு அருகிலுள்ள பின்னெபெர்க் மாவட்டத்தில் உள்ள வீடுகள் வணிகங்களில் தேடுதல் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

சந்தேகிக்கப்படும் நான்கு பேர் வியன்னா தாக்குதலில் பங்கேற்றனர் என்பதில் இப்போதைக்கு சந்தேகம் இல்லை, ஆனால் தாக்குதல் நடத்தியவருடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

ஆஸ்திரிய நீதித்துறை ஜேர்மனிக்கு தகவலளித்த பின்னர் தேடல் வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன என பி.கே.ஏ. குற்றவியல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

வியன்னா தாக்குதலுடன் தொடர்புடையதாக சுவிட்சர்லாந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்