ஜேர்மனியில் ஆசிரியையை தலையை வெட்டப்போவதாக மிரட்டிய மாணவன்: அவன் கூறிய அதிரவைக்கும் வார்த்தைகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த ஆசிரியையை, தலையை வெட்டப்போவதாக மிரட்டியுள்ளான் மாணவன் ஒருவன்.

ஜேர்மனியில் Spandau என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியை ஒருவர், மாணவர்களின் பெற்றோர் கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின் முக்கியத்தை வலியுறுத்துவதற்காக, கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார் அந்த ஆசிரியை.

அப்போது, வகுப்பிலிருந்த இஸ்லாமிய மாணவன் ஒருவன், என் பெற்றோர் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் அப்படி ஏதும் நடக்கும் என்றால், பாரீஸில் அந்த மாணவன் தன் ஆசிரியரை என்ன செய்தானோ அதே போல் நான் உங்களுக்கு செய்வேன் என்று கூறியுள்ளான்.

பிரான்சில் வரலாற்று ஆசிரியரான Samuel Paty என்பவர் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை வகுப்பறையில் காட்டியதற்காக, Abdoulakh Anzorov (18) என்ற செசன்ய தீவிரவாதி அவரது தலையை வெட்டிக்கொன்ற விடயத்தைத்தான் இந்த ஜேர்மன் மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

இதற்கிடையில், பிரான்சில் ஆசிரியர் Samuel Paty கொலை செய்யப்பட்டதற்கு அந்த ஜேர்மன் பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

எல்லோரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்போது, இதே மாணவன், Abdoulakh Anzorov, Samuel Patyயைக் கொன்றது நியாயம்தான், முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொல்ல உங்களுக்கு அனுமதி உண்டு, அது சரியானதுதான் என்று கூறிய தகவலும் வெளியாகியுள்ளது.

அப்போது, அதே நிகழ்ச்சியின்போது, இஸ்லாமிய மதகுரு ஒருவரும் அந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்திருக்கிறார். அவர் அந்த மாணவனிடம், எந்த மனிதனையும் கொலை செய்வதை நியாயப்படுத்தமுடியாது என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவனின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவலளிக்க, அவர்கள், அவன் அப்படிப்பட்டவன் இல்லை என்றும், யாரோ அவனது மனதை மாற்றியிருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

அந்த மாணவனின் நடவடிக்கையால் அவனது வகுப்பிலுள்ள சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்