ஜேர்மனியில் உள்நாட்டு யுத்தத்தை துவக்க முயற்சி: 12 பேர் கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில், மசூதிகள், அரசியல்வாதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தி, உள்நாட்டு யுத்தம் ஒன்றை துவக்க திட்டமிட்ட 12 வலது சாரிக் கொள்கையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களைக் கொன்று நாட்டில் உள்நாட்டு யுத்தம் போன்ற ஒரு சூழலை உருவாக்குவது அவர்கள் திட்டம்.

11 பேர் கொண்ட ஒரு குழு, மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவர் என மொத்தம் 12 பேர், வழக்கமாக ஓரிடத்தில் கூடி திட்டமிட்டுள்ளதுடன், 11 பேர் ஆயுதங்கள் வாங்குவதற்காக நிதியுதவி செய்யவும் வாக்களித்துள்ளனர்.

அவர்களது வீடுகளிலிருந்து பெருந்தொகை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

31 முதல் 61 வயது வரையுள்ள அந்த நபர்கள் அனைவரும் ஜேர்மானியர்கள். அவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகிவிட்ட ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்