ஜேர்மனியின் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வேகமாக உயரவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் நிலைமை இன்னும் தீவிரமாக உள்ளது என்று அதிபர் அஞ்சலோ மெர்க்கல் தெரிவித்தார்.

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்த முடிவு எடுப்பது தொடர்பான கூட்டத்தை மத்திய மற்றும் மாநிலத் தலைவர்கள் நவம்பர் 25 ஆம் தேதி வரை ஒத்திவைத்த பின்னர் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மணிநேரத்தில் ஜேர்மனியில் 14,582 புதிய தொற்றுகள் மற்றும் 199 இறப்புகள் பதிவானது.

தற்போது வரை நாட்டில் மொத்தம் 8,17,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது மற்றும் பலி எண்ணிக்கை 12,833 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொற்று எண்கள் அதிவேகமாக உயரவில்லை, ஆனால் இன்னும் மிக அதிகமாக உள்ளன.

எனவே நாம் சமூக தொடர்புகளை குறைக்க வேண்டும் என்று மெர்க்கல் கூறினார். மேலும், ஜேர்மன் மக்கள்தொகையில் 30-40% பேர் பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்