வரலாற்றிலேயே மிகப்பெரிய கலைப்பொருட்கள் கொள்ளை சம்பவம்: மூன்று பேர் கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நவயுக வரலாற்றிலேயே நடந்த கொள்ளைகளில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று ஜேர்மனியின் அருங்காட்சியகம் ஒன்றில் நிகழ்த்தப்பட்டது.

சுமார் ஓராண்டுக்கு முன் ஜேர்மனியின் Dresden அருங்காட்சியகத்தில் வைரம் பதிக்கப்பட்ட ஏராளம் கலைப்பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் தொடர்பாக பெர்லினிலுள்ள 18 இடங்களில் பொலிசார் ரெய்டுகள் நடத்தினார்கள்.

இந்த கொள்ளை தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு அரை மில்லியன் யூரோக்கள் பரிசளிக்கப்படும் என்று கூட பொலிசார் அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், செவ்வாயன்று, இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஜேர்மானிய குடிமக்கள் என்று மட்டும் கூறியுள்ள பொலிசார், அவர்களது அடையாளங்களை வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Photo: DPA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்