என் பணிக்காலத்தில் நான் எடுத்த மிக கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று: ஜேர்மன் சேன்ஸலர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
574Shares

தன் பணிக்காலத்தில் தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த முடிவும் ஒன்று என்கிறார் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.

ஜேர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சி, தன் பணிக்காலத்தில் கடினமான நேரமாக இருப்பதாக மெர்க்கல் கூறியுள்ளார்.

பெர்லினில் பொருளாதார மாநாட்டில் பேசிய மெர்க்கல், கொரோனா சிக்கலின்போது ஜேர்மன் குடிமக்கள் அனுபவிக்கும் கடும் அழுத்தத்தை தான் புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அன்பிற்குரியவர்களை சந்திக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஜனநாயகத்தின் மீது ஒரு சுமையாக இருப்பதை தான் அறிந்துள்ளதாக தெரிவித்த மெர்க்கல், ஆனால், அவை தவிர்க்க இயலாதவை என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

என் பணிக்காலத்தில் நான் எடுத்த மிகக்கடினமான முடிவுகளில், நான் எடுத்த இந்த முடிவுகளும் அடங்கும் என்கிறார் மெர்க்கல்.

இப்போதைக்கு கொரோனா நிலைமை மோசமாக உள்ளது, என்னைக் கேட்டால், மிக மோசமாக உள்ளது என்பேன் என்று கூறும் மெர்க்கல், கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் மக்கள் இன்னமும் அதிக முயற்சி செய்யவேண்டும் என்கிறார்.

ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 14,400 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதையடுத்து, மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 815,746 ஆகியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267.

எனவே, ஜேர்மனியில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,800 ஆகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்