ஜேர்மனியில் கொரோனா நோயாளிகளை கொன்ற மருத்துவர் கைது! விசாரணையில் கூறிய திடுக்கிடும் தகவல்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் 47 மற்றும் 50 வயதுடைய இரண்டு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

North Rhine-Westphalia எசென் நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் பிப்ரவரி முதல் பணிபுரிந்த 44 வயதான மூத்த மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

வியாழக்கிழமை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நகர பொலிசார் தெரிவித்தனர்.

மூத்த மருத்துவர் வழங்கிய மருந்தால் நோயாளிகள் உடனடியாக இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நவம்பர் 13 மற்றும் 17ம் தேதி-யில் மருத்துவமனை இரண்டு நோயாளிகள் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து உடனடியாக வழக்கறிஞர்களுக்கு தகவலளித்து மற்றும் மூத்த மருத்துவரை பணி நீக்கம் செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருதவாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு நோயாளி மிகவும் அவதிப்பட்டதால் அவரை கொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக விசாரணையில் மருத்துவர் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்