நீங்களும் ஹீரோதான்... கொரோனா காலகட்டத்தில் வீட்டிருப்பவர்களை பாராட்டி ஜேர்மனி வெளியிட்டுள்ள வீடியோ!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்லாமல் வீட்டிலிருப்பவர்களை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஜேர்மனி அரசு.

வீட்டிலிருந்த நீங்களும் ஹீரோதான், சோம்பலாகத்தான் இருந்தீர்கள், உங்களிடம் ஒன்றே ஒன்றைத்தான் அரசும் எதிர்பார்க்கிறது: அது, எதுவும் செய்யாமல் இருப்பதுதான் என்கிறது அந்த வீடியோ.

நீங்களும் இந்த வீடியோவிலிருப்பவரின் கௌரவமான முன்மாதிரியை பின்பற்றவேண்டும் என்கிறது அந்த விளம்பரம்.

அந்த வீடியோவில் ஒருவர் வீட்டிலிருக்கிறார், அவர் செய்ததெல்லாம் ஒரே வேலைதான், தொலைக்காட்சி பார்ப்பது முதல் எல்லாவற்றையும் அவர் தனது வீட்டின் முன்னறையிலிருக்கும் சோபாவில் அமர்ந்தபடியே செய்கிறார், அவ்வளவுதான்.

கடைசியாக, அந்த வீடியோ இந்த வார்த்தைகளுடன் முடிவடைகிறது: நீங்களும் ஹீரோவாகலாம், வீட்டிலேயே இருப்பதன் மூலம்! அதாவது, தேவையில்லாமல் வெளியே சென்று கொரோனா பரவலை அதிகரிப்பதைவிட, பேசாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தால் கொரோனா பரவல் பெருமளவில் தவிர்க்கப்படும் என கருதுகிறது ஜேர்மனி அரசு.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்