ஜேர்மனியில் வார இறுதியில் திடீரென இரவு வானம் ஏழு விநாடிகள் பளிச்சென ஒளிர, தீப்பந்து ஒன்று வானிலிருந்து விழுவதை 90 பேர் வரை பார்த்துள்ளனர்.
அந்த பளிச்சென்ற ஒளிக்கீற்று 5 முதல் 7 விநாடிகளுக்கு ஒளிர்ந்து, பின் படிகப்பச்சை நிறத்திற்கு மாறி, இரண்டாக பிரிந்து முடிவடைந்துள்ளது. இதை பெர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ஜேர்மன் வானியல் நிலையமும் உறுதி செய்துள்ளன.
பெரும்பாலும், அது ஒரு விண்கல்லின் துண்டாக இருக்கலாம் என்கிறார், ஜேர்மன் வானியல் நிலையத்தைச் சேர்ந்த நிபுணரான Dieter Heinlein.
ஞாயிறன்று, இந்த அபூர்வ நிகழ்வை சில மணி நேரத்திற்குள் 90 பேர் வரை பார்த்து தங்களுக்கு தகவலளித்ததாக தெரிவிக்கிறார் பெர்லினின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Jürgen Oberst.
உள்ளூர் ஊடகம் ஒன்று, வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேம் கமெராவில் பதிவான, ரைன் நதிக்கு மேல் பாய்ந்து செல்லும் அந்த விண்கல்லைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
Feuerkugel über Deutschland gesichtet. https://t.co/sQZUtlEvDF
— DLR_next (@DLR_next) November 28, 2020