ஜேர்மனியில் மீண்டும் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள்: எப்போது வரை?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பகுதி பொதுமுடக்கமும் புதிய கட்டுப்பாடுகளும் இன்று முதல் (டிசம்பர் 1ஆம் திகதி) அமுலுக்கு வந்துள்ள நிலையில். அவை டிசம்பர் 20 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விதிகள் நெகிழ்த்தப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தொடர்பு கொள்வது தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அவை என்னவென்றால், உணவகங்கள், காபி ஷாப்கள், மதுபான விடுதிகள், கலை மற்றும் கலாச்சார அமைப்புகள் மூடப்பட்டே இருக்கும். (ஆனால், வீட்டுக்கு உணவு வாங்கிச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது).

கட்டிடங்களுக்குள்ளானாலும் சரி, திறந்த வெளியிலானாலும் சரி, அதிகபட்சம் ஐந்துபேர் வரையே கூட அனுமதி, இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்கள் கூடலாம், 14 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.

இந்த நீட்டிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், டிசம்பர் 1 முதல் டிசம்பர் 20 வரை அமுலில் இருக்கும்.

ஆனால், அது ஜனவரி வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் ஏன்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25 அன்று மாகாண தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின், கொரோனாவை கட்டுக்குள் வைக்க, நமக்கு புதுப்பிக்கப்பட்ட ஒரு முயற்சி தேவை என்று கூறியுள்ளார் மெர்க்கல்.

இன்று அமுலுக்கு வரும் இந்த புதிய கட்டுப்பாடுகள், கிறிஸ்துமசை ஒட்டியுள்ள சில நாட்களுக்கு மட்டும் நெகிழ்த்தப்படும். டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை மக்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கலாம்.

ஆனால், இந்த விதிகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்