நீங்கள் வாங்கியிருப்பது ஐரோப்பிய தயாரிப்பான தடுப்பூசி: பிரித்தானியாவை வெளுத்துவாங்கும் ஜேர்மனி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1203Shares

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா வாங்கியிருக்கும் தடுப்பூசியே ஒரு ஐரோப்பிய தயாரிப்புதான் என பிரித்தானியாவை வெளுத்துவாங்கியுள்ளார் ஜேர்மன் அமைச்சர் ஒருவர்.

பிரித்தானியா முதன் முதலில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, பிரெக்சிட் காரணமாகத்தான் தங்களுக்கு அது சாத்தியமானதாக தெரிவித்திருந்தார் பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock.

அதனால் எரிச்சலடைந்துள்ள ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, பிரித்தானியா மீது தனது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

நீங்கள் வாங்கியிருப்பது ஜேர்மன் தயாரிப்பான ஒரு தடுப்பூசி, அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய நீங்கள் வாங்கியிருப்பது. ஒரு ஐரோப்பிய தடுப்பூசி என்று பிரித்தானியாவை சாடியுள்ளார் அவர்.

Image: GETTY

உண்மை என்னவென்றால், இந்த தடுப்பூசி மிக நல்ல தயாரிப்பு, அதனால்தான் பிரித்தானியா அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறியுள்ள Spahn, இம்மாதிரியான சிக்கலான நேரத்தில் ஐரோப்பாவுக்கும் சர்வதேசநாடுகளுக்கும் உள்ள ஒத்துழைப்பு எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்கிறார்.

ஒரு ஜேர்மன் நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியதில் தனக்கு பெருமை என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசியை பெறவேண்டும் என்பதால்தான் தாங்கள் தாமதிப்பதாக தெரிவித்த அவர், முதலில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதால் பிரித்தானியா நடத்தும் வெற்றிக்கொண்டாட்டங்களைக் கண்டு எரிச்சலடையும் நபர் தான் மட்டும் அல்ல என்றார்.

Image: GETTY

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்