ஜேர்மன் தலைநகரில் மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு!

Report Print Basu in ஜேர்மனி
456Shares

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த சரமாரி துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை காலை பெர்லின் Kreuzberg மாவட்டத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அலுவலகங்களுக்கு அருகில் உள்ள Stresemannstraße நுழைவாயிலில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் சம்பவயிடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், ஹெலிகாப்டர் உதவியுடன் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து சம்பவயிடத்தில் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எதற்காக, யார் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது குறித்த தகவல் தற்போது வரை தெரியவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்