குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் சடலம்: மருத்துவமனையில் கைதான தாயார்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
394Shares

ஜேர்மனியில் குப்பைத்தொட்டி ஒன்றில் பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்றை கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதன் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் Regensburg நகரில் குப்பைத்தொட்டி ஒன்றில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை தகவல் வெளியிட்ட பொலிசார், குழந்தையின் தாயாரை கைது செய்துள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரத்தில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், கொலைக்குற்றம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை நேரம், குப்பைத்தொட்டி ஒன்றில் இருந்து பச்சிளம் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குழந்தையின் தாயார் 24 வயதான அந்தப் பெண் மருத்துவமனையில் இருப்பது பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

குழந்தையின் உடற்கூராய்வில் இயற்கையான முறையில் மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும், குழந்தையின் மரணத்திற்கு காரணமான பின்னணி தெளிவாக இல்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் தாயாரிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்