ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தின் தொடக்கத்தைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டுவதற்காக, ஜேர்மன் விமானி சாமி கிராமர் ஞாயிற்றுக்கிழமை அன்று வானத்தில் ஒரு பெரிய சிரிஞ்ச் வடிவில் 200 கி.மீ. பறந்துள்ளார்.
20 வயதான விமானி சாமி கிராமர், தெற்கு ஜேர்மனியில் Constance ஏரிக்கு அருகிலுள்ள வானத்திற்குச் செல்வதற்கு முன்பு ஜி.பி.எஸ் சாதனத்தில் செல்ல வேண்டிய வழியை வரைபடமாக்கி, பின்னர் இதனை செய்துள்ளார். சிரிஞ்ச் வடிவ பாதை இணைய தளமான ஃப்ளைட்ராடார் 24-இல் காட்டப்பட்டது.
"பலர் இன்னும் தடுப்பூசியை எதிர்த்துவருகின்றனர், எனது நடவடிக்கை இதைப் பற்றி மீண்டும் சிந்திக்க அவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கலாம்" என்று கிராமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், "விமானத் தொழில் தொற்றுநோய் காரணமாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சி ஒரு மகிழ்ச்சியை பரப்பும் அறிகுறியாக இருக்கலாம்" என்று அவர் கூறினார்.
ஜேர்மனி தனது கோவிட் -19 தடுப்பூசி பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கும், ஜனவரி முதல் ஒரு வாரத்திற்கு சுமார் 7,00,000 பேருக்கு விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.