77 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தேவாலய மணி: ஜேர்மனியில் கண்டுபிடித்த உரிமையாளர்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
452Shares

போலந்து நாட்டிலிருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தேவாலய மணி ஒன்று ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெற்கு போலந்தின் Slawiecice என்ற இடத்திலுள்ள தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், 1555ஆம் ஆண்டு காலத்துடன் தொடர்புடைய, பழமை வாய்ந்த தங்களுக்கு சொந்தமான மணி ஒன்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடிவந்தார்கள்.

அப்போது, ஜேர்மனியிலுள்ள Münster என்ற இடத்திலுள்ள ஆலயம் ஒன்றில் பின்னால் அந்த 400 கிலோகிராம் எடையுள்ள அந்த மணி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. உண்மையில், இரண்டாம் உலகப்போரின்போது, நாஸிக்கள் சுமார் 80,000 மணிகளை உருக்கி ஆயுதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

அப்படி உருக்கப்படாமல் தப்பிய 1,300 மணிகளில் போலந்து நாட்டு மணியும் ஒன்று. அந்த தேவாலய மணி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், கொரோனா பரவல் சூழலில் அது உடனடியாக அதுபோலந்துக்கு அனுப்பப்படப்போவதில்லை.

என்றாலும், 77 ஆண்டுகள் காத்திருந்துவிட்டோம், இன்னும் ஒரு மாதம் காத்திருப்பது என்பது பெரிய விடயமல்ல என்கிறார்கள் மணியின் சொந்தக்காரர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்