உயர்மட்ட தளபதி சுலைமானி படுகொலையில் ஜேர்மனிக்கும் தொடர்பு! எப்படி? ஈரான் பரபரப்பு தகவல்

Report Print Basu in ஜேர்மனி
572Shares

உயர்மட்ட இராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலையில் அமெரிக்கா மட்டுமின்றி, ஈராக், சிரியா, லெபனான், ஜோர்டான், குவைத், கத்தார், ஜெர்மனி, பிரித்தானிா உள்ளிட்ட பல நாடுகளும் பங்கு வகித்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

2020 ஜனவரி 3 ஆம் தேதி பாக்தாத்திற்கு விஜயம் செய்தபோது அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

இந்நிலைியல், சுலைமானி கொலை தொடர்பான விசாரணை முடிந்ததும் அதிகமான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று DEFA Press தெரிவித்துள்ளது.

இந்த அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், இதற்கு நாம் பெரிய விலை கொடுத்துள்ளோம். மேலும் தியாகிகளின் இரத்தத்தால் அடையப்பட்ட தேசிய ஒற்றுமையை பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று DEFA Press கூறியுள்ளது.

புதன்கிழமை, ஈரானிய வழக்கறிஞர்-ஜெனரல் Ali Al-Qasi Mehr, சுலைமானியின் படுகொலையில் பிரித்தானியா பாதுகாப்பு சேவை நிறுவனமான G4S மற்றும் ஜேர்மனியில் உள்ள விமான தளமும் பங்கு வகித்து இருப்பதாகக் கூறினார். எனினும், இதற்கான ஆதாரங்களை அவர் வழங்கவில்லை.

இந்நிலையில்,சுலைமானியை குறிவைக்க தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள Ramstein விமான தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக ஈரானிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்