உதவ இயலாது... வேண்டுமானால் சட்டத்தரணி ஒருவரை பாருங்கள்: ஜேர்மனிக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளும் குழப்பங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
985Shares

பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு திரும்பும் பிரித்தானியர்கள் பிரெக்சிட்டால் புதுப்புது பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை பார்ப்போம்.

Schengen பகுதியின் 90 நாட்கள் விதி என்ற விதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, குறிப்பாக Schengen பகுதியிலுள்ள நாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகளாக செல்பவர்கள், ஒவ்வொரு 180 நாட்களுக்கும் 90 நாட்கள் அங்கு செலவிடலாம் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்களது பாஸ்போர்ட்டில் எல்லை அதிகாரிகள் முத்திரையிடுவார்கள் ( passports stamped).

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே வாழ்ந்து வரும் பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு திரும்பும்போது இப்படி முத்திரையிடப்பட்ட தேவையில்லை. ஆனால், பிரெக்சிட்டால் அதெல்லாம் மாறிவிட்டிருக்கிறது.

இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை செலவிடுவதற்காக பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டு ஜேர்மனிக்கு திரும்பிய பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்டில் அதிகாரிகள் முத்திரையிட்டுள்ளார்கள்.

அதாவது, அவர்கள் ஜேர்மனியில் வாழிட உரிமம் பெற்றவர்கள், ஆனால், முத்திரையிடப்பட்டுவிட்டால், அவர்கள் 90 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்திலேயே நாட்களை செலவிடும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. விளக்கம் கொடுக்க யாரும் தயாராக இருப்பது போலவும் தெரியவில்லை! இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு சென்று விட்டு ஜேர்மனியின் Munich நகருக்கு திரும்பிய Catherine Keens என்பவர், இப்படி ஒரு பிரச்சினையை சந்தித்துள்ளார்.

ஜேர்மன் எல்லை அதிகாரிகளிடம், தான் ஜேர்மனியில் வாழ்வதாக தெரிவித்தும், அவர்களுக்கே சரியாக என்ன செய்யவேண்டும் என்று தெரியாததால், தனது பாஸ்போர்ட்டில் முத்திரையிட்டு விட்டதாக கூறுகிறார் Catherine.

Munichஇலுள்ள பிரித்தானிய தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் கொடுத்த பதில் Catherineக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள், தங்களால் இந்த விடயத்தில் உதவ இயலாது என்றும், சட்டத்தரணி ஒருவரை அணுகுமாறும் கூறியுள்ளார்கள்.

பிரித்தானிய அரசாங்கத்தால் கைவிடப்பட்டதுபோல் உணர்கிறோம் என்று கூறும் Catherine, யாரை அழைப்பது, என்ன செய்வது என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும், தங்களைப் போலவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்