இவர் எங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை: ஜேர்மனி அறிவிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
596Shares

தாய்லாந்து மன்னர் தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை என்று கூறியுள்ளது ஜேர்மனி.

தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkorn (68), 2016ஆம் ஆண்டு மன்னராக பதவியேற்றதிலிருந்து பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே சுற்றிக்கொண்டிருந்ததால் அவரது நாட்டில் அதற்கு பெரும் எதிர்ப்பு உருவாகியது.

உலகமே கொரோனாவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், Vajiralongkorn ஒரு கூட்டம் அழகான இளம்பெண்களை அழைத்துக்கொண்டு ஜேர்மனியில் உள்ள ஒரு ஹொட்டலில் உல்லாசம் அனுபவித்துவந்தார்.

இதனால் ஜேர்மனியிலும் அவருக்கு எதிர்ப்பு உருவானது. அவரது நாடு போராட்டத்தால் கொந்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஜேர்மனியில் அமர்ந்துகொண்டே அவர் அரசாட்சி செய்கிறாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த Sevim Dagdelen என்பவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம் சார்பில், ஒரு நாட்டின் தலைவர் என்கிற முறையில், Vajiralongkorn ஜேர்மனி வருவதற்கு அவருக்கு விசா தேவையில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

அவருக்கு விசா தேவையில்லை என்றால், அவர் எவ்வளவு காலம் ஜேர்மனியில் தங்குவார் என்பதை கட்டுப்படுத்த முடியாது என்பதால், கடைசி கட்ட நடவடிக்கையாக அவரை விரும்பத்தகாத நபர் என என அறிவிக்கலாமே என்றார் Dagdelen.

அதற்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ஒரு நாட்டின் தலைவருக்கு விசா தேவையில்லை என்றாலும், அவர் தங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்க ஜேர்மனிக்கு எந்த தடையும் இல்லை என்று கூறப்பட்டது.

Vajiralongkorn ஜேர்மனியில் அமர்ந்துகொண்டே அரசாட்சி செய்கிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாதுதான் என்று கூறியுள்ள அரசு, ஆனால், அவர் ஜேர்மனியில் அமர்ந்துகொண்டே அரசாட்சி செய்கிறார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்