கொரோனா தடுப்புசி போட்டுக்கொள்ள தயங்கும் ஜேர்மன் மருத்துவர்களும் செவிலியர்களும்: காரணம் என்ன?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1275Shares

தற்போதுள்ள சூழலில் தடுப்பூசிதான் கொரோனாவை எதிர்கொள்ள ஒரே வழி என்ற ஒரு நிலைஉலகம் முழுவதும் காணப்படுகிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழலிலும், ஜேர்மன் மருத்துவர்களும் செவிலியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்.

அதற்கு காரணம்தான் என்ன? முதல் ஆளாக போய் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நான் விரும்பவில்லை என்கிறார் செவிலியரான Vivien Kochmann.

நான் தடுப்பூசிக்கு எதிரானவள் அல்ல, இதற்கு முன் தேவையான பல தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால், கொரோனாவைப் பொருத்தவரை, அது இப்போதுதான் அறிமுகமானது, அது 100 சதவிகிதம் நம்பிக்கைக்குரியது என்ற செய்தியும் இதுவரை இல்லை, ஆகவேதான் நான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்.

Vivien மட்டுமில்லை, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்.

சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 73 சதவிகிதம் மருத்துவர்களும், 50 சதவிகிதத்துக்கும் குறைவான செவிலியர்களும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட சம்மதித்துள்ளார்கள்.

முதியோர் இல்லங்களில் பணிபுரிவோர் 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், மற்ற மருத்துவ ஊழியர்களில் மூன்றில் இரு பங்கினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்புத் தெரிவிக்கிறார்கள் என்கிறார் ஜேர்மன் முதியோர் இல்ல கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர்.

இன்னொரு பக்கம், மருத்துவர்களும் செவிலியர்களும், தாங்கள் பாதுகாப்பு உடை அணிந்து பாதுகாப்பாக இருப்பதால், தாங்கள் அதிக அபாயம் உடையவர்கள் என்ற பிரிவின் கீழ் வரவில்லை என நம்புவதும் ஒரு காரணம் என்கிறார் தொற்று நோயியல் நிபுணரான Karl Lauterbach.

ஆனால், சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வேறொரு கோணம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தடுப்பூசியின் நீண்ட கால பக்க விளைவுகள் குறித்த பயம்தான் ஜேர்மன் மருத்துவர்களும் செவிலியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளார்கள் சிலர்.

குறிப்பாக, பிற்காலத்தில் கர்ப்பமடையும்போது, கொரோனா தடுப்பூசியின் தாக்கம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் பல மருத்துவ ஊழியர்களுக்கு உள்ளது.

ஆக, தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் கட்டாயம் அணிந்துகொள்ளத்தானே வேண்டும் என்ற எண்ணமும், ஏற்கனவே பலமுறை கொரோனா கிருமிகளை எதிர்கொண்டுவிட்டதால், தங்கள் உடலில் ஆன்டிபாடிகள் இருக்கும் என்ற எண்ணமும் என, பல காரணங்களால் ஜேர்மன் மருத்துவர்களும் செவிலியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள் என கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்