ஜேர்மனியில் பணப்பெட்டி என்று நினைத்து 750 கிலோ எடையுள்ள பெட்டியை சில திருடர்கள் திருடிச்சென்றுள்ளார்கள்.
Kothen என்ற ஜேர்மன் நகரத்திலுள்ள நிர்வாக அலுவலகம் ஒன்றில் நுழைந்த அந்த திருடர்கள் இரும்புப்பெட்டி ஒன்றை திருடிச்சென்றுள்ளார்கள்.
ஆனால், அதில் பணம் இல்லை, அதைவிட முக்கியமான பொருட்கள் இருந்துள்ளன. ஆம், அந்த பெட்டியில் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் மற்றும் அடையாள அட்டைகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
அலாரம் அமைப்பு மற்றும் CCTV கமெராக்களை ஹேக் செய்து கட்டுப்படுத்திய அந்த திருடர்கள், அந்த பெட்டியுடன் கூட, ஸ்கேன் செய்யும் கருவிகள் இரண்டு மற்றும் ஒரு பிரிண்டர் ஆகியவற்றையும் திருடிச்சென்றுள்ளதாக, நகர மேயர் தெரிவித்துள்ளார். பொலிசார் திருடர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.