ஜேர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனாவால் ஒரே நாளில் 1,244 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,244 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் நோய் கட்டுப்பாடு மையமான RKI அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதிகமான இளைஞர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். ஐ.சி.யூ-வில் உள்ள நோயாளிகளின் சராசரி வயது 60-க்கும் குறைவாக உள்ளது என RKI நிலைமை குறித்து விவரித்துள்ளது.
நன்கு தெரிந்தவர்களிடம் கூட தொடர்புகளை குறைந்தபட்சமாக்க குறைக்க வேண்டும். வெளிபுறங்களில் மக்களை சந்திக்கும் போது சமூக இடைவெளி விட்டு முகக் கவசம் அணியுங்கள்.
பயணம் மேற்கொள்ள வேண்டாம். புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன, நிலைமை மிக மோசமாகும்.

சோதனையில் கொரோனா இல்லை என உறுதியானவர்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என அர்த்தமல்ல, அவர்களும் கண்டிப்பாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
வைரஸ் அனைத்து வயதினர்களிடையும் பரவி வருகிறது. 85% மேற்பட்ட ஐசியூ படுக்கையில் நிரம்பியுள்ளன, சாதாரண படுக்கையும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து கண்டிப்பாக போட்டுக் கொள்ளுங்கள் என RKI வலியுறுத்தியுள்ளது.