ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர் யார்?: இன்று தேர்ந்தெடுக்க கூடும் பிரதிநிதிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
210Shares

ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்தில் அடுத்து பொறுப்பேற்க இருக்கும் நபரை இன்று 1,001 பிரதிநிதிகள் கூடி தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

உண்மையில், ஏஞ்சலாவின் கட்சியான CDUவின் தலைமைப் பொறுப்பை வகிப்பதற்காக ஒருதலைவரைத் தான் அவர்கள் இன்று கூடி தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

அவர்தான் அடுத்து சேன்ஸலராவாரா என்பது இப்போதைக்கு தெரியாது. இந்நிலையில், அடுத்த சேன்ஸலருக்கான போட்டியில் Armin Laschet, Friedrich Merzமற்றும் Norbert Roettgen ஆகியோர் தற்போது உள்ளார்கள்.

ஆனால், மக்கள் பவேரிய தலைவரான Markus Soederஐத்தான் அடுத்த சேன்ஸலராக பார்க்க விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மெர்க்கலைப் பொருத்தவரை, அவர் தனக்கு அடுத்து தனது ஆதரவாளரான AnnegretKramp-Karrenbauerஐத்தான் தன் இடத்தில் அமர்த்தினார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உள்ளூர் தேர்தல் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் பதவி விலகவேண்டியதாயிற்று.

எனவே, அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது, இப்போதைக்கு அந்த 1,001 பிரதிநிதிகள் கையில்தான் உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்