ஜேர்மன் விமானநிலையத்தில் பீதியை கிளப்பிய நபர்! அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியதன் பின்னணி

Report Print Santhan in ஜேர்மனி
345Shares

ஜேர்மன் விமான நிலையத்தில் 38 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென்று அல்லாஹு அக்பர் என்று கூறியதுமட்டும், உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால், பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ஜேர்மனியில் இருக்கும் Frankfurt விமான நிலையத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குறித்த நபருக்கு வயது 38 வயது எனவும் அந்த நபர் Slovenia-வை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் இந்த நபர் முகக்கவசம் அணியாததால், பொலிசார் அவரை நெருங்கிய போது, பயத்தில் நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன், அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி பொலிசாரிடம் ஆக்ரோஷமாக நடந்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபரை ஆயுதமேந்திய பொலிசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த நபர் தான் கொண்டுவந்திருந்த சாமான்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனால் பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதால், பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து Federal Police Frankfurt-ன் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முகக்கவசம் அணியாத Slovenia-வை சேர்ந்த பயணியை பொலிசார் அணுகினர்.

உடனே அந்த நபர் பொலிசாரிடம் ஆக்ரோஷமாக நடந்தது மட்டுமின்ற், அல்லாஹு அக்பர், உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.

அவரின் நடவடிக்கை முரட்டுத்தனமாக, அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், ஆயுதமேந்திய பொலிசார் அவரை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின் அன்று இரவு விமானநிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்