ஜேர்மனியிலும் புதிதாக ஒரு வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: 35 நோயாளிகள் பாதிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
363Shares

பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதுபோலவே, ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch-Partenkirchen என்னும் பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில், 73 நோயாளிகளுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

அவர்களில் 35 பேருக்கு தொற்றியுள்ளது ஒரு புதுவகை கொரோனா வைரஸ் என தெரியவந்துள்ளது.

அது பிரித்தானிய வகை வைரஸோ அல்லது தென்னாப்பிரிக்க வகை வைரஸோ அல்ல, அதேபோல் அது அந்த கொரோனா வைரஸ்களைப்போல எளிதில் பரவக்கூடியதா அல்லது பயங்கரமாக கொல்லக்கூடியதா என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதைக் கண்டு பிடிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்