கொரோனா நிலைமை குறித்து நிச்சயம் பேசவேண்டும்: ஏஞ்சலா மெர்க்கல் சொன்னதும் தொடர்புகொண்ட ஒரு நாட்டின் ஜனாதிபதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
199Shares

பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றின்போது பேசிய ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், கொரோனா நிலைமை குறித்து நிச்சயம் சுவிட்சர்லாந்துடன் பேசவேண்டும் என்றார்.

ஜேர்மனியின் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் பலவகை கொரோனா வைரஸ்கள் பரவிவருவதைக் குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

அது எல்லை கட்டுப்பாடுகளை விதிப்பதைக் குறித்தது அல்ல, அதை நாம் தவிர்க்கவே விரும்புகிறோம் என்று கூறிய மெர்க்கல், ஏற்கனவே அது தொடர்பாக செக் குடியரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன், நம் நாட்டிலுள்ள கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளபோது, நம் நாட்டில் இருக்கும் கொரோனா தொற்றைவிட இருமடங்கு அதிகம் தொற்று பரவல் உடைய நாடுகள் கடைகளைத் திறந்தால் நமக்கு அது நிச்சயம் சிக்கல்தான் என்றார் மெர்க்கல்.

அவர் இப்படி குறிப்பிட்டுக் கொஞ்சம் நேரத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்ட, சுவிஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள Guy Parmelin, தான் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சற்று முன்புதான் தொலைபேசியில் பேசியதாகவும், இரு நாடுகளும் இந்த இக்கட்டான சூழலில் உறுதியுடன், நெருக்கமாக செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்