ஜேர்மனியில் 50,000 கடந்த துயரம்: இறுகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
407Shares

ஜேர்மனியில் கொரோனாவினால் சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,862 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,06,262 ஆக உள்ளது.

மேலும் நேற்று மட்டும் 859 பேர் சிகிச்சை பலனின்றி பலியாக, கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது. மட்டுமின்றி, 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜேர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்