நாளொன்றிற்கு 100,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்: ஜேர்மன் வைரஸ் துறை நிபுணர் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
172Shares

கொரோனா கட்டுப்பாடுகள் சீக்கிரம் நீக்கப்படும்பட்சத்தில் நாளொன்றிற்கு 100,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என ஜேர்மன் வைரஸ் துறை நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்பூசி போடும் திட்டம் இன்னமும் முடியாத நிலையில், அதற்குள் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுமானால், ஜேர்மனியில் நாளொன்றிற்கு 100,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகலாம் என பெர்லின் Charité மருத்துவமனையின் தலைமை வைரஸ் துறை நிபுணரன Christian Drosten எச்சரித்துள்ளார்.

இந்த கொரோனா எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ள Drosten, அதற்குள் அவசரப்பட்டு கட்டுப்பாடுகளை நீக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

இப்போது கொரோனா தொற்றுவோரின் எண்ணிக்கையை போதுமான அளவு கட்டுப்படுத்தவில்லை என்றால், இளவேனிற்காலம் மற்றும் கோடையில் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார் அவர்.

முதியோர்கள் மற்றும் எளிதில் நோய் தொற்றும் அபாயத்திலிருப்போருக்கு தடுப்பூசி போட்டு முடித்திருக்கும் நேரத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, பெரும் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான மற்றும் சட்ட ரீதியான அழுத்தம் உருவாகியிருக்கும்.

ஆனால், அப்படி நடந்தால், குறுகிய நேரத்தில் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகுவார்கள்.

அந்த நேரத்தில் நம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை 20,000 அல்லது 30,000ஆக இருக்காது என்று கூறும் அவர்,நாளொன்றிற்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை 100,000ஆக இருக்கும் என எச்சரிக்கிறார்.

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதாது, அவை இன்னமும் கடுமையாக இருக்கவேண்டும் என்கிறார் Drosten.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்