ஜேர்மன் நகரம் ஒன்றில் அமைந்திருக்கும் கட்டிடம் ஒன்றில் எரிவாயுக் குழாய் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
Memmingen நகரில், விபத்து நடந்த அந்த கட்டிடத்தில்தான் செஞ்சிலுவைச் சங்க அலுவலகமும் அமைந்திருந்தது.
விபத்தில் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வெடி விபத்தில் அந்த கட்டிடம் பயங்கரமாக சேதமடைந்தது.
அந்த கட்டிடத்திலுள்ள ஜன்னல்கள் எல்லாம் நொறுங்கிக் கிடப்பதை வெளியான படத்தில் காணலாம்.
அவ்வளவு பயங்கரமாக அந்த எரிவாயுக் குழாய் வெடித்ததை பார்த்தால், தாங்கள் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார், செஞ்சிலுவைச் சங்க அலுவலரான Wilhelm Lehner என்பவர்.