உருமாற்றம் கண்ட பிரித்தானிய தொற்று... ஜேர்மனியில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதியவர்கள் பாதிப்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் முதியோர் இல்லம் ஒன்றில் 14 பேர்கள் உருமாற்றம் கண்ட பிரித்தானிய தொற்றால் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இல்லத்தில் வசிக்கும் அனைவருக்கும் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அளிக்கப்பட்ட பின்னரே, இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Lower Saxony பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றிலேயே உருமாற்றம் கண்ட பிரித்தானிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த முதியோர் இல்லமானது கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அங்குள்ள அனைவருக்கும் தடுப்பூசியின் 2 டோஸ் மருந்துகளும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த முழு இல்லமும், அனைத்து ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

பிப்ரவரி 2 ம் திகதி அங்குள்ள ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் 14 முதியவர்களுக்கு உருமாற்றம் கண்ட பிரித்தானிய தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்