ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு: போக்குவரத்து நிறுத்தம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியின் வடக்கு மற்றும் மையப் பகுதிகள் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில கால்பந்தாட்டப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த வாரம் பனிப்புயல் காரணமாக மேலும் வெப்பநிலை குறையும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பனிப்புயல் காரணமாக பலர் காயமடைந்துள்ளதாகவும், விபத்துக்கள் பல ஜேர்மனி முழுவதும் நிகழ்ந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Hanover தெருக்கள் பெரும்பாலும் வெறிச்சோடிக் கிடப்பதாகவும், மக்கள் பயந்து வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பதாகவும் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேர்மன் தெருக்கள் பலவற்றில் 20 சென்றிமீற்றர் உயரத்துக்கு பனி படர்ந்துள்ளதாகவும், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்துக்கு பலத்த காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று மேலும் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்றும், ஜேர்மனியின் சில பகுதிகளில் 40 சென்றிமீற்றர் வரை பனி படர்ந்திருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்