ஜேர்மனியில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது குற்றவியல் நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, ஒப்புதல் பெறும் முன்னர் தமக்கும் குடும்பத்தாருக்கும் போட்டுக்கொண்ட மருத்துவர் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

ஜேர்மனியில் மருத்துவராகவும் தொழிலதிபராகவும் செயல்படுபவர் Winfried Stöcker.

இவரே தற்போது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளார். உலக நாடுகள் கொரோனா மருந்துக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே இந்த ஜேர்மன் மருத்துவர் தாம் கண்டுபிடித்த மருந்தை தமக்கு போட்டுக்கொண்டுள்ளார்.

73 வயதான மருத்துவர் Winfried Stöcker தாம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தை சில நாட்கள் இடைவெளியில் நான்கு முறை தமக்கு போட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த மே மாதம் 8ம் திகதி, தமது சமூக ஊடக பக்கத்தில் அதை அறிவிக்கவும் செய்தார்.

அதில், தாம் இப்போது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தாம் உருவாக்கிய கொரோனா மருந்தை தமது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும், 100 தன்னார்வலர்களுக்கும் செலுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, வீரியம் மிகுந்த கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் பணியில் தமது நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் கேட்டு பொலிசார் அனுப்பிய கடிதத்திற்கும் அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து, மருந்துகள் தொடர்பான சட்டத்தை மீறியதற்காக மருத்துவர் Winfried Stöcker-கு எதிராக விசாரணை முன்னெடுக்க இருப்பதாக தலைமை விசாரணை ஆணையர் அறிவித்துள்ளார்.

ஆனால், அரசின் இந்த நடவடிக்கை தேவையற்றது என கூறியுள்ள மருத்துவரின் சட்டத்தரணிகள், தனிப்பட்ட தேவைகளுக்காக வலி நிவாரணி போன்றவற்றை தயாரிக்க ஒரு மருத்துவருக்கு அனுமதி பெறவேண்டியது இல்லை எனவும்,

மருத்துவர் Winfried Stöcker அளித்த போதுமான அறிவுரைக்கு பின்னரே, குடும்பத்தினரும் அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும் அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டதாகவும் வாதிட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்