மேலும் ஒரு மாதத்திற்கு பூட்டுதலை நீட்டிக்கவுள்ள ஜேர்மனி! சில தளர்வுகள் இருக்கலாம் என தகவல்

Report Print Ragavan Ragavan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனி தனது கொரோனா வைரஸ் பூட்டுதலை மார்ச் 14 வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கலுக்கும் 16 கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது நாட்டில் லாக்டவுன் விதிகளை தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வரும் பிப்ரவரி 14 வரை அறிவிக்கப்பட்டுள்ள பூட்டுதலை, சில தளர்வுகளுடன் மார்ச் 14-ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சில மாநில தலைவர்கள் பூட்டுதலை எளிதாக்குவதற்கான கால அட்டவணையை அமைக்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், நாட்டில் தொடக்க பள்ளிகள், நர்சரிகள், சலூன்கள் மற்றும் கடைகளுக்கு தளர்வுகள் இருக்கலாம் என தகவல் வெளியாகியள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்