ஜேர்மனியில் பிப்ரவரி 14ம் திகதியோடு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது மார்ச் மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மார்ச் 7ம் திகதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க ஜேர்மனி மத்திய அரசாங்கம் மற்றும் 16 மாநில தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
எனினும், பள்ளிகள் மற்றும் சிகை அலங்கார கடைகள் மார்ச் 7ம் திகதிக்கு முன்னதாக திறக்கப்படும் என கூறப்படுகிறது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உருமாறிய புதிய கொரோனா பரவல் குறித்த கவலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடந்த கூட்டத்திற்கு பின் பேசிய Saxony மாநிலத் தலைவர் Michael Kretschmer, ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000-க்கு 35 வழக்குகளுக்குக் கீழே குறையும் போது கட்டுப்பாடுகளின் தளர்வு விவாதிக்கப்படும்.
மார்ச் மாதத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு பற்றி பேசுவோம். எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கவனக்குறைவாக இருக்கக்கூடாது என கூறினார்.