வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக 14 பேர் கைது: வெடிமருந்து பொருட்களும் சிக்கின

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக 14 பேரை ஜேர்மன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டென்மார்க் அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விவரம் எதையும் வெளியிடாத நிலையில், ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட மூன்று பேர் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட மூவர் சிரியாவைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். 33, 36 மற்றும் 40 வயதுடைய அந்த மூவரும் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பெரும் வன்முறைத் திட்டம் ஒன்றை திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள், ஜனவரி மாதம், ஏராளம் வெடிபொருட்களாக பயன்படுத்தப்படக்கூடிய ரசாயனங்களை வாங்கியுள்ளனர்.

அவர்களில் இருவர் டென்மார்க்கிலும் ஒருவர் ஜேர்மனியின் Hesse மாகாணத்திலும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், பொலிசார் 10 கிலோ வெடிமருந்து மற்றும் சில கருவிகளை Dessau என்ற நகரிலுள்ள ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்