ஜேர்மனியில் சாலையோரம் வாழும் ஒரு இளம் பெண் உறையவைக்கும் பனிக்கு மத்தியில் பிரசவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது -15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உள்ளது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பவேரிய மாநிலத்தில் உள்ள Nuremberg நகரத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு ரெயில் சுரங்கப்பாதையில் 20 வயது மிக்க ஒரு பெண் புதிதாக பிறந்த தன்னுடைய குழந்தையுடன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
வீடற்ற அந்த இளம் பெண் -15 டிகிரி செல்ஸியஸ் குளிருக்கு மத்தியில் வெட்டவெளியில் பிரசவித்துள்ளார் என தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
அவருடன் மற்றோரு பெண்ணும் துணைக்கு இருந்துள்ளார். அவர் தாயையும் குழந்தையையும் ஒரு Sleeping Bag-க்குள் வைத்து வெப்பமூட்ட முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் ஒரு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு உதவியுள்ளனர்.