கோடீஸ்வரியாக காட்டிக்கொண்டு மோசடி செய்த ஜேர்மானிய இளம்பெண்: ஏமாற்றிய பணத்தை எப்படி திருப்பிக் கொடுத்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

தன்னை ஒரு கோடீஸ்வரியாக காட்டிக்கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு ஜேர்மானிய இளம்பெண் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தான் 60 மில்லியன் டொலர்கள் சொத்துக்கு வாரிசு என கூறிக்கொண்டு Anna Delvey என்ற பெயரில் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் உல்லாசமாக வாழ்ந்துவந்தார் Anna Sorokin என்ற ஜேர்மானிய இளம்பெண்.

தன்னை செல்வந்தராக காட்டிக்கொண்டு, வங்கிகள் மற்றும் ஆடம்பர ஹொட்டல்களில் 200,000 டொலர்கள் வரை ஏமாற்றியிருக்கிறார் Anna.

அவரை செல்வந்தர் என்று நம்பி ஒரு வங்கி 100,000 டொலர்கள் கடன் வழங்கியிருக்கிறது.

அவர் செய்த மோசடி வெளியானதையடுத்து 2019ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் Anna.

GETTY IMAGES

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தனது செய்கைகளுக்காக மன்னிப்புக்கோரிய நிலையில், தற்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

உலகின் கவனம் ஈர்த்த Annaவின் கதை தொலைக்காட்சித் தொடராக வெளியாக, அதற்காக அவருக்கு 320,000 டொலர்கள் ஊதியம் வழங்கப்பட்டது.

தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதிலேயே அந்த தொகையில் பெரும்பகுதியை செலவிட்டுள்ளார் Anna.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள Anna, இனி அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படலாம் என கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்