ஜேர்மனியில் மனைவி பிள்ளைகள் உட்பட மொத்த குடும்பத்தையும் கத்தியால் தாக்கி கொன்றுவிட்டு, குடியிருப்புக்கும் நெருப்பு வைத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரே, இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாகவே, 41 வயதான அந்த நபர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் 77 வயதான மனைவியின் தாயாரையும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததுடன், தாமும் கத்தியால் தாக்கியே, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியிருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்களே முதலில் 5 சடலங்களையும் மீட்டுள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை நேரம் சுமார் 5 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில், மேலதிக தகவல் கிடைத்தால் மட்டுமே விசாரணையை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மரணமடைந்தவர்கள் தொடர்பில் போதிய தகவல் ஏதும் அப்பகுதி மக்களுக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கை சூழல் தொடர்பிலும் பொலிசாருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.